வதந்தி பற்றிய மிக முக்கியமான தேசபக்திக் குறிப்பு:

write off என்றால், கணக்கிலிருந்து கடனை நீக்குதல் (போக்கெழுதுதல்).
நீங்கள் உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று,
‘நான் வாங்கிய கடனை write off மட்டும் செய்யுங்கள். waiver செய்ய வேண்டாம்’ என்று தேசபக்தியுடன் கூறுங்கள். மேலாளரும் தேசபக்தியுடன் write off மட்டும் செய்வார்.
ஒருவேளை, அந்த மேலாளர், ' உன் கடனை write off’ செய்துவிட்டால், நீ கடனைத் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லையே... கணக்கிலிருந்தே உன் கடனை நான் நீக்கியதாக அர்த்தமாகுமே?’ என்று கேட்டால்,
அவர் தேசபக்தி இல்லாதவர், வதந்திகளைப் பரப்புபவர். அவர் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, அஜர்பைஜானுடன் கள்ள உறவு கொண்டவர்.
தேசபக்தர் விஜய் மல்லையாவின் 1.201 கோடி ரூபாய், மற்ற பிற தேசபக்தர்களின் 6,000 கோடி ரூபாய் ஆகியவை எல்லாம் write off மட்டும் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஸ்டேட் வங்கி தனது கணக்கிலிருந்து இவர்கள் கடன்களை நீக்கிவிட்டது.
அதனால், கணக்கில் இல்லையென்றாலும் அவரிடம் கடன் தொகையை தேசபக்தி அமைச்சர்கள் கேட்டு வாங்கிவிடுவார்கள்.
இதுதான் ஒரே உண்மை. இதற்கு மாறாக யாராவது பேசினால் அது வதந்தி என்றறிக.
Published on 16/11/2016
*******************************************************************************************************
கருப்புப் பணத்தை ஒழிக்கும் புனிதப் போரில் மானம் வெட்கம் அனைத்தையும் இழந்து போராடும் எளிய மனிதர்களின் பார்வைக்காக...!
இணைப்பில் உள்ள ‘பொன்மொழிகள்’, ஹிட்லர் என்ற தேசபக்தர் உதிர்த்தவை.
படுகொலைகள் செய்தபோதும், சாமானிய மக்களின் பொருளாதாரத்தைப் பிடுங்கியபோதும் அவர் கடைபிடித்த உத்திகள் இவை.
இணைப்பில் உள்ள ‘பொன்மொழிகள்’, ஹிட்லர் என்ற தேசபக்தர் உதிர்த்தவை.
படுகொலைகள் செய்தபோதும், சாமானிய மக்களின் பொருளாதாரத்தைப் பிடுங்கியபோதும் அவர் கடைபிடித்த உத்திகள் இவை.


No comments:
Post a Comment